Share via:
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு
வரும் ஜூன் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக தமிழகம் முழுக்க கொண்டாட்டம் நடத்த
முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்கு ஸ்டாலின் விடுத்திருக்கும் அழைப்பில், ‘தமிழ் நாடெங்கும்
கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும் கழக இருவண்ணக்
கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும். ஜூன -4 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கொடி ஏற்றி
தன்னிகரில்லாத் தமிழினத் தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில்
கலைஞர் நூறாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறு தழுவுதல் அரங்கம்,
சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில்
வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினவிடம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக்
கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தல் ஆணையத்தின்
செயல்பாடுகள், மோடியின் செயல்பாடு, ரிசல்ட் வந்த பின் என்ன செய்வது, ரிசல்ட் எதிராக
வந்தால் என்ன செய்யலாம், ரிசல்ட் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக வந்தால் யாரை பிரதமராக்குவது
என்றெல்லாம் ஆலோசனைகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில்
40 இடங்களிலும் தி.மு.க. வெல்லும் என்று ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார். அதேநேரம்,
மத்தியில் மோடிக்கு முழுமையான வெற்றி வாய்ப்பு இல்லை என்பதும் உளவுத் துறை மூலம் தெரியவந்துள்ளது.
ஆகவே, மத்தியில் இண்டியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார்.
ஆகவே, எப்படியாயினும் தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம்
கிடைக்கும் என்று நம்புகிறார். கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக
இருக்கிறாராம். 4ம் தேதி ரிசல்ட் வந்ததும் 5ம் தேதியே கனிமொழி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
பார்க்கலாம்.