Share via:
இப்போது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது வழக்கறிஞர்
வாஞ்சிநாதனுக்கு ஜி.ஆர்.சாமிநாதன் சம்மன் கொடுத்து கேள்வி எழுப்பிய விவகாரம்தான். என்ன
நடந்தது என்று விவரமறிந்தவகளிடம் கேட்டொம்.
இது குறித்து பேசுபவர்கள், ‘’ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ரகசியமாக புகார் அளிப்பது வக்கீலுக்கு நம் நாட்டின் சட்டம் கொடுத்த உரிமை. இதை பயன்படுத்தித்தான் சென்ற மாதம் ஒரு ஹை கோர்ட் ஜட்ஜ் பற்றி ரகசிய புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். ஆனால்… சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த ரகசிய புகாரை யாரோ ஸ்கேன் செய்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் சட்டவிரோதமாக ரிலீஸ் ஆக்கியுள்ளனர்.
அந்த புகார் சம்பந்தப்பட்ட ஜட்ஜ் ஜி.ஆர்.சாமிநாதனுக்கும் வந்து சேர்ந்திருக்கிற்ரது.
உடனே, தன்னைப் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் புகார் அளித்த வக்கீலை சட்டப்படியான முறையில் அல்லாமல்… முறையற்ற வகையில் சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு கூப்பிட்டு முறையற்ற வகையில் விசாரணை நடத்தி முறையற்ற வகையில் கேள்விகள் கேட்டுள்ளார்.
அதற்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் முறைப்படி எழுத்துப்பூர்வமாக கேள்விகள் கேட்டால், தானும் எழுத்துப்பூர்வமாக முறைப்படி பதில் அளிப்பதாக கூறியுள்ளார். ஆக… சுப்ரீம் கோட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதம் எப்படி… வாட்ஸ் ஆப் குரூப்பில் எவ்வாறு கசிகிறது..?! சுப்ரீம் கோட்டுக்கும் இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் அந்த புகாரின் ஸ்கேன் காபியை பகிர்ந்த வக்கீலுக்கும் என்ன தொடர்பு..?! என்பதே பிரதான கேள்விகள். இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் மதிப்பும் மாண்பும் மண்ணோடு மண்ணாகிப் போயுள்ளது.
இந்நிலையில் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட
பல்வேறு அமைப்புகளும் உரக்கக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அவர்கள், ‘’இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நீதிபதிகள் பதவியேற்கும் போது ஏற்கும் உறுதி மொழியில், சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தத்துவமாகும். பலமுறை கண்டனங்கள் எழுந்துள்ளன! ஆனால், குறிப்பிட்ட மாண்புமிகு நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அதன் மதுரை கிளையிலும் அளித்த பல தீர்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் சார்பும், ஜாதியப் பாதுகாப்பு உணர்வும் இருப்பதை சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறோம்…’’
புகார் அளித்தவரை அழைத்து மிரட்டுவது என்பது சரியானதா? தன் மீது புகார் கொடுக்கப்பட்டால், மாண்பமை ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், அதற்குரிய இடத்தில் பதில் – விளக்கம் தர வேண்டுமே தவிர, புகார் அளித்தவரை நீதிமன்றத்தில் அழைத்து மிரட்டுவது என்பது எவ்வகையில் சரியானது? தன் மீதான வழக்கை, தன்னைப் பற்றிய வழக்கை தானே விசாரித்து நீதி வழங்க முடியுமா? அந்த விசித்திர நீதிப் போக்கு நீதிமன்ற நீதிக்கு உகந்ததா?..’’ என்று கேள்வி மேல் கேள்வி
எழுப்பியிருக்கிறார்கள்.