News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு மாற்றப்பட உள்ள நீதிபதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

 

அதில் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகிய நீதிபதிகள் முதல் அமர்வில் பொதுநலன் மனு, ஆட்கொணரவு மனு, குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகின்றனர். அதேபோல் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லெட்சுமிநாராயணன் 2வது அமர்வில் ரிட்மனுக்களையும், ரிட் மேல்முறையீட்டுமனுக்களையும் விசாரித்து வருகின்றனர். மேலும் நீதிபதிகளான ஆர்.எம்.டி.டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் 3வது அமர்வில் உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரித்து வருகின்றனர். இந்த நீதிபதிகள் தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு 3 மாத கால பணிக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

 

அதோடு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link