Share via:
ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியின் 45வது ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி கண்ணை கவரும் வகையில் அமைந்தது.
சென்னை வடபழனி துரைசாமி சாலையில் ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளி அமைந்துளளது. இங்கு நேற்று (டிச.1) பள்ளியின் 45வது ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த சங்கீதா மகினினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 4.30 மணியளவில் ஆண்டுவிழா வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாடல்களும், நடனங்களும், நாடகங்களும் பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்களை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக மீன்களை நேரில் பார்ப்பது போன்ற அழகாக வடிவமைக்கப்பட்ட அரங்குகளையும், நாடகங்களையும் சொல்லலாம். அந்த வகையில் நாடகத்தில் பங்கேற்ற தருமி கதாபாத்திரம் பார்த்த அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ராமச்சந்திரன் மற்றும் முதல்வர் சீமா ராமச்சந்திரன், தாய் சத்யா பள்ளி தாளாளர் சுதா மற்றும் எம்.ஜி.ஆர். பள்ளியின் தலைமை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடந்த ஆண்டில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.