Share via:
ஒர்க் ஃப்ரம் ஹோம்
அரசியல்வாதியான நடிகர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்காக
தமிழக ஆளநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது எக்கச்சக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கவர்னரை சந்தித்துப்
புகார் சொல்லப்போகிறார் என்றதுமே தி.மு.க.வினர், ‘’அண்ணா பல்கலைக்கழக வேந்தரான கவர்னரை
கண்டித்து ஆளுநரிடம் விஜய் புகார்…’’ என்று கிண்டல் செய்தார்கள். மாநிலத்துக்குக்
கவர்னர் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் விஜய் கவர்னரை சந்திப்பது சரியா..?
அண்ணா பல்கலையின் பாதுகாப்புப் பொறுப்பு ஆர்.என்.ரவியிடம் இருப்பதால் நேரடியாக அவரை
கலாய்க்கும் வகையில் புகார் செய்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.
ஆனால், இதையெல்லாம்
கண்டுகொள்ளாமல் கவர்னரை சந்தித்துப் புகார் அளித்தார் விஜய். நிர்வாகிகளுடன் கவர்னரை
சந்தித்தார் என்றாலும் அதன் பிறகு கவர்னரும் விஜய்யும் மட்டும் 10 நிமிடங்கள் தனியாக
தேர்தல் அரசியல் குறித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த மீட்டிங் சுமுகமாக
முடியவில்லை. விஜய்க்கு ஏமாற்றம் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனாலே விஜய் சந்திப்பு
குறித்து ராஜ்பவன் வெளியிட்ட அறிவிப்பில், ‘’மாண்புமிகு ஆளுநர் அவர்களை தமிழக வெற்றிக்
கழகம் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு
நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாகவும் அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநரின்
தலையீடு கோரி மனு அளித்தார்..’’ என்று கூறியிருந்தது.
ஜோசப் விஜய் என்பது
ஹெச்.ராஜாவின் அட்மின் பயன்படுத்தும் பெயர். அதாவது பா.ஜ.க.வினர் விஜய்யை விமர்சனம்
செய்யும் நேரத்தில் இந்த பெயரையே குறிப்பிடுவார்கள். ஆனால், ஒரு அரசியல் கட்சித் தலைவர்
தன்னை விஜய் என அடையாளப்படுத்தும் போது, ஜோசப் விஜய் என அவரை அழைப்பதும் அங்கீகரிப்பதும்
திட்டமிட்ட மதவாத செயல் என்று முதன்முதலாக தி.மு.க.வினரே பாய்ந்தார்கள்.
இப்படி கவர்னர் அழைப்பார்
என்று எதிர்பார்க்காத விஜய் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். இதை எதிர்த்தும்
பேச முடியாமல் ஆதரவாகவும் பேச முடியாமல் தடுமாறுகிறார்கள்.
இதுகுறித்து தி,மு.க.வின்
ராஜீவ்காந்தி, ‘’தாங்கள் ஆளுனரிடம் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான்
உள்ளது!! ஆனால் கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ்நாட்டின் ஆளுனர் மாளிகையின்
செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது!! இது பாசிசம்!! பாசிசத்திற்கும்
பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை’’ என்று
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்கள். பா.ஜ.க.வும் விஜய்யும் கூட்டணி சேராமல்
தனித்து நின்று வாக்கைப் பிரிப்பதே தி.மு.க.வுக்கு சாதகம் என்பதால் இந்த விஷயத்தில்
குஷியாக இருக்கிறார்கள்.
இதற்கு பா.ஜ.க.வினர்,
‘’லெட்டர் பேட்ல பேரை மாத்தி வெச்சிட்டா போதுமா?? அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட சொந்த
ஐ.டி.களில் என்ன இருக்கோ அதைதான் கவர்னரின் அலுவலுகம் பின்பற்றும்’’ என்று சப்போர்ட்
செய்கிறார்கள். இப்போது யாரை அடிப்பது என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில்
இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கவர்னரை
சந்திக்க வந்த விஜய் கார் கண்ணாடியில் விதியை மீறி கருப்பு ஃபிலிம் ஒட்டியிருக்கிறார்.
இதனால் விசிபிளிட்டி பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்றால்,
இதற்காக இவர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புகார் கிளம்பியிருக்கிறது.