Share via:
ரூ.1,933.69 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்த படியே சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
அதன்படி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335.86 கோடி ரூபாயிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் சார்பில் 258.11 கோடி செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56.94 கோடி செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78.42 கோடி செலவிலும் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதைத்தொடர்ந்து ரூ.278.97 கோடி செலவிலான 2 புதிய பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். அதோடு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் 121 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.