Share via:
தமிழக அரசு எவ்வளவு கடன் வாங்குனா உங்களுக்கு என்ன… உங்க சட்டையை
புடிச்சு கேட்க போறாங்களா..? உங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன சம்பந்தம்? என்று
ஒரே ஒரு பேட்டியில் எக்குத்தப்பாகப் பேசி ஸ்டாலின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார்
ஜெயரஞ்சன். இவரெலாம் பொருளாதார அறிஞரா என்று சமூகவலைதளத்தில் போட்டுத் தாக்குகிறார்கள்.
ஜெயரஞ்சனை பொருளாதாரப் புலி என்று நினைத்து விலை கொடுத்து வாங்கிய
திமுக இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறது என்கிறார்கள். அரசு வாங்கும் கடனுக்கும்
மக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் எதற்காக வீட்டு வரி , சொத்து வர , மின்சார கட்டணும்னு
எல்லாத்தையும் உயர்த்தணும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜெயரஞ்சன் குறித்து, ‘’ஜெயரஞ்சன் கடந்த எட்டு ஆண்டுகளாகத் திமுகவின்
புகழ் பாடி வருகிறார். அதற்காகவே திட்டக் குழுவில் தலைவர் பதவியையும் பணத்தையும் அள்ளிக்
கொடுக்கிறார் ஸ்டாலின். மடத்தனமாக தன்னைத் தக்க வைக்க எதை வேண்டுமானாலும் பேசுபவர்.
திமுகவின் ஒரு வட்டச் செயலாளர் மாதிரிப் பேசக்கூடிய இந்த ஜெயரஞ்சன்
எப்படிப் பொருளாதார மேதையாவார்? கடந்த அதிமுக காலத்தை விமர்சித்தது தொடங்கி இப்போது
வரை ஒன்றும் புரியாத உளறுவாயனாக இந்தப் பொருளாதாரப் பேதை இருக்கிறார்.
ஸ்டாலினுடைய எடுபிடியாக வந்தவர் தானே இந்த ஜெயரஞ்சன் இவருக்கெலாம்
எப்படி தொலைநோக்குடைய அறிவு இருக்கப்போகிறது.? நேற்று தமிழ்நாடு பெரும் கடனில் மூழ்கித்
தத்தளிக்கிறது! அதிலிருந்து எப்படித் தப்பிக்க போகிறது என்று சொன்னவர் தான் இவர்! இந்தியாவில்
அதிகமாக கடன் பட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலே
இந்த கடன்களால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லை என்று சொல்லுகிறார் இந்த மெத்தப் படித்த
புத்திசாலி!
2018ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் இவர் பேசிய முதல் காணொளியில்
இவர் ஒரு கணக்கு சொல்கிறார். அதாவது, ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
25% சதவீதத்திற்கு மேல் கடன் வாங்க கூடாது என்று நிபுணர் போல பேசுகிறார். திமுக ஆட்சியில்
திட்டக்குழு துணைத்தலைவராக இப்போது பதவி வகித்து கொண்டிருக்கும் அவர் இரண்டாவது காணொளியில்
ஏன் கடன் குறைய வேண்டும்? கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்கின்றார்.
அவர் சொல்லும் கணக்குப்படியே பார்த்தாலும்… மாநில மொத்த உள்நாட்டு
உற்பத்தி (GSDP) டிசம்பர் 2025இல் — ₹35.67 லட்சம்
கோடி தமிழ்நாட்டின் கடன் டிசம்பர் 2025இல் — ₹9.25 லட்சம்
கோடி இந்த கடன் 26% ஆகும். இவர் சொல்லும் 25% தாண்டிவிட்டது. உங்களுக்கெல்லாம் குற்ற
உணர்ச்சியே இருக்காதா?
கடன் யாரு தலையில விடியும்?எந்தவொரு புரிதலுமின்றி, கேள்வி கேட்கும்
நெறியாளர் தனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லுறாங்க… தமிழகம் படித்த
மாநிலம் என்று சொல்லுகிறார்கள்! என்ன இழவோ இவர் மாதிரி ஆட்கள் தான் இங்கு பொருளாதார
மேதை! இது மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டுதான் ஸ்டாலின் ஆட்சியழுது கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு ஆட்சி இதுதான் இன்றைய திமுகவாம்..’’ என்று திட்டித் தீர்க்கிறார்கள்.
பொருளாதாரப் புலியின் சாயம் வெளுத்துப்போச்சு.