Share via:
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, அவரது
வீட்டில் ரெய்டு செய்யப்பட்டது. அங்கு நிறைய நிறைய தங்க, வெள்ளி நகைகள் எடுக்கப்பட்டன.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா மட்டுமே
தண்டனை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.
நீதிமன்றத்தின் வசமிருக்கும் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் இட்டு,
அந்த பணத்தின் மூலம் ஜெயலலிதா கட்ட வேண்டிய தண்டத் தொகையை கட்ட வேண்டும் என்று ஒரு
கருத்து நிலவி வந்த நிலையில் ஒரு புதிய தீர்ப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி தற்போது, நீதிமன்றக் காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற
நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டுள்ளார்.
கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் தனக்கு சொந்தமானது என்று
மறைந்த முதல்வரின் உறவினர் ஜெ.தீபா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் சிபிஐ
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அளித்த தீர்ப்பில், நகைகளை ஏலம் விடாமல், தமிழக
அரசின் உள்துறை மூலம் ஒப்படைத்து, நகைகளை தமிழ்நாடு அரசுக்கு மாற்றுவது நல்லது என கருதுகிறேன்.
அதன்படி, போலீசாருடன் இணைந்து, செயலர் அந்தஸ்தில் உள்ளவரை தமிழ்நாடு அரசு நியமிக்கவேண்டும்.
திறமையான நபர்களை நியமித்து, நகைகளை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆகவே, தமிழக அரசு மூலம் நகைகளை பெற்றுக்கொள்ளும் பணி நடைபெற உள்ளது.
அதன்பிறகு, இந்த நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படி செய்தால், மக்களுக்கு ஜெயலலிதாவின்
நகைகளைப் பார்ப்பதற்கும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள
வாய்ப்பாக இருக்கும் என்று தி.மு.க. நினைக்கிறதாம்.
அதுசரி, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்
போகிறது என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்.