Share via:
சமீபகாலமாக தி.மு.க. மேடையில் தென்படுபவர் குட்டி பத்மினி. பா.ஜ.க.வில்
அவருக்குப் போதிய கவனிப்பு இல்லை என்றதும் தி.மு.க. பக்கம் திசை மாறி வந்திருக்கிறார்.
இப்போது ஜெயலலிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்கொலை முடிவு செய்தார் என்றெல்லாம்
பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுக்கும் லிவிங் டுகெதர் ரிலேஷன்சிப்
உண்டு என்பது தெரிந்த தகவல் என்றாலும் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், சாய்
வித் சித்ராவில் குட்டி பத்மினி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
ஜெயலலிதா குறித்து, “சோபன்
பாபு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, இவங்க அலங்காரம் செஞ்சு ரெடியாகி, கடைசி நிமிசத்துல
காரை திருப்பிட்டு போய்ட்டார். ஜெ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி மாத்திரை சாப்பிட்டாங்க…
அதுக்கப்புறம் ரொம்பவும் கஷ்டப்பட்டு அவரை காப்பாத்துனாங்க. 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்,
அதை கலைக்க ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு உயிருக்கு ஆபத்து வரும் என்றெல்லாம் சொன்னார்கள்.
அதன் பிறகு அதை கலைத்தாரா அல்லது பிள்ளை பிறந்ததா என்பது தெரியவில்லை.
அதன்பிறகு எம்.ஜி.ஆரிடம் சென்றார். அவர்தான் அரசியலுக்கு அழைத்துவந்தார்” என்று நடந்த
சம்பவங்களை மிகவும் இயல்பாகப் பேசுகிறார்.
ஜெயலலிதாவுக்கு பிள்ளை இருக்கான்னு நான் கலைஞர்கிட்டே கேட்டேன்..
’இருந்தா எங்களுக்கு தெரிஞ்சிருக்காதா’ன்னு கலைஞர் சிரிச்சிட்டே சொன்னார்” என்றும்
கூறியிருக்கிறார். இந்த விஷயத்துக்குப் பிறகு கலைஞர் இந்த விஷயத்தில் ரொம்பவும் பெருந்தன்மையாக
நடந்துள்ளார் என்று தி.மு.க.வினர் இந்த பேட்டியை தமிழாம் முழுக்க கொண்டுபோகிறார்.
தி.மு.க.வினர் போட்டுக் கொடுத்த ரூட்டில் ஜெயலலிதாவை குட்டி பத்மினி
அவமானப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா சொந்த வாழ்க்கையைப் பற்றி மூன்றாவது
நபர் பேசுவது அநாகரிகம் என்று அ.தி.மு.க.வினர் யாரும் வாயைத் திறக்கவே இல்லை. சசிகலாவும்
இதை பேசவில்லை என்பதைப் பார்க்கும்போது, எல்லாமே உண்மைதானோ..?