News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் திமுக பிரவேசம். யாரென்று அடையாளம் தெரியாத நபரை டிடிவி தினகரன் அரசியலுக்குக் கொண்டுவந்தார். அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு சிக்கல் வந்த காலங்களில் எல்லாம் பன்னீர் முதல்வர் வேட்பாளராக இருந்தார். மூன்று முறை முதல்வர் என்ற பெருமை கிடைத்தது.

அதிமுகவின் கோயில் போன்ற தலைமையகத்தை பன்னீரின் ஆட்கள் காலால் உதைத்து, உடைத்த காரணத்தாலே எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் சேர்க்கவில்லை. அவருக்கு ஆதரவு கொடுத்துவந்த பாஜகவும் பன்னீரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் தனக்கு அடையாளம் கொடுத்த அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது திமுகவில் இணைந்துவிட்டார் பன்னீர். இதையடுத்து அதிமுகவினர் எல்லோரும் பன்னீரைக் கழுவிக்கழுவி ஊற்றுகிறார்கள்.

அதிமுகவின் ரத்தம் உடலில் ஓடுவது உண்மையாக இருந்தால் அரசியலில் இருந்து துறவறம் போயிருக்க வேண்டும், இப்படி துரோகிகள் காலில் விழலாமா என்று கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆத்மா அவரை தொந்தரவு செய்ததால், சட்டைப் பையிலும் வீட்டிலும் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டாராம்.

பன்னீர் இப்போது திமுகவின் அடிமையாக மாறிவிட்டார். ஜெயலலிதா கால், சசிகலா கால், அமித்ஷா கால், எடப்பாடி கால் என்று பார்த்தவர் இப்போது ஸ்டாலின் காலில் விழுந்திருக்கிறார். அம்புட்டுத்தான் பன்னீரின் அரசியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link