Share via:

விஜய் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் தயாராகி வரும் ஜனநாயகன்
தைப் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட
ஜனநாயகனை ஜனவரியில் வெளியிட்டால் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று அவரது ஆலோசகர்கள்
கூறியதன் அடிப்படையில் ரிலீஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக
பூஜா ஹெக்டேவும், லேட்டஸ்ட் சென்சேஷன் மமிதா பைஜூவும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக திடீரென விஜய் பொங்கியெழுந்து
அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஜாக்டோ ஜியோ அமைப்பை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு
வந்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது அறிக்கைக்கு த.வெ.க.வினரே
கடுமையான கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
அதாவது ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அவர்களுடைய சொந்த நலனுக்காகப்
போராட்டம் நடத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அல்லது மும்மொழிக் கொள்கைக்கு
எதிராகப் போராடவில்லை. பழைய ஓய்வூதியம், அதிக சம்பளம் என்று போராடுகிறார்கள். இந்த
சுயநலக் கூட்டத்துக்கு விஜய் ஆதரவு கொடுக்கக்கூடாது. தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துகொண்டே
போகிறது. இத்தகைய சூழலில் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை
வைப்பது சரியான அணுகுமுறை அல்ல. பொருளாதார சிந்தனை, ஆக்கபூர்வ நடைமுறைகளை விஜய் தெரிந்துகொள்ள
வேண்டும்’’ என்கிறார்கள்.
அதேநேரம் ஜாக்டோ ஜியோ
அமைப்பினர், ‘’விஜய்க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு யாருமே
ஆதரவு தெரிவிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி முடியாது என்றே கூறினார். ஸ்டாலின் நம்பவைத்து
கழுத்தை அறுத்துள்ளார். விஜய் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்தால்
ஓட்டுப் போடுவோம்’’ என்கிறார்கள்.
சிக்கிடாதீங்க விஜய்… பனையூருக்கு வந்து போராட்டம் நடத்துவாங்க.