Share via:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெகு விமரிசையாகவும், பாதுகாப்புடனும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற 2025ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
* மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற அமைப்பாளர்களால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு போட்டி நடத்த அனுமதி கிடையாது.
* ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பம் முதல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆணைகளை தமிழக அரச பிறப்பித்துள்ளது.
இது குறித்த அரசாணையை தமிழக அரசு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.