Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/GKk59HEbsAASM7M-1.jpg)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய
பிறகு, விஜய்க்கு வரும் 2026 தேர்தலில் 15 – 20% வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல்
வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாக அவரது நிர்வாகிகள் குஷியாகிறார்கள். மேலும்,
விஜய் நேரடியாக களத்தில் இறங்கும்போது 30% ஆகும் என்றும் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு
எதிரான வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபோர் வாக்கும்
சேரும்பட்சத்தில் 40% மேலாக வாங்கி தனிப்பெரும் கட்சியாகி விஜய் முதல்வராவார் என்று
சமூகவலைதளத்தில் அதகளப்படுத்தி வருகிறார்கள்.
அதேநேரம் விஜய்க்கு தொடர்ந்து தாக்குதல் கொடுத்துவரும் நாம் தமிழர்
கட்சியினர் பிரசாந்த் கிஷோரின் ரீல் அறுந்து ரொம்ப நாளாச்சு. அவர் கை வைச்ச அத்தனையும்
நாசமாப் போச்சு என்று பெரும் பட்டியல் போடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியினர், ‘’கடந்த
ஆண்டு தேர்தல்களின்போது, ஹிமாச்சலில் காங்கிரஸ் தோற்கும் என்றார் பிரசாந்த் கிஷோர்.
ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்றார்
பிரசாந்த் கிஷோர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தெலுங்கானாவில் பிஆர்எஸ்
ஆட்சி அமைக்கும் என்றார் பிரசாந்த் கிஷோர். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
கடந்த 2021ம் ஆண்டு இனி தேர்தல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை
என ஓய்வை அறிவித்து முழுநேர பீகார் அரசியல்வாதியாக மாறினார். ஜன் சுராஜ் என்ற அரசியல்
கட்சியைக் கடந்தாண்டு பீகாரில் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர். பீகாரில் நான்கு சட்டமன்றத்
தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சியினர் போட்டியிட்டனர். நான்கு தொகுதிகளிலும்
100க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார். கடும் பரப்புரை வியூகங்களை வடிவமைத்தார்.
“30 ஆண்டுகால மோசமான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது; உங்களுக்கு
நன்மை செய்யவே வந்திருக்கிறேன்” என்று முழங்கினார். தேர்தல் முடிவு வந்தப் போது,
நான்கு தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சியின் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.
இவர்களில் 3 பேர் டெபாசிட்டை பறி கொடுத்தனர்.
ஆனார் பிறகு 2025ல் நட்புக்காக டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு
ஆலோசகராக இருந்தார். அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் கதை முடிந்துபோனது. இப்போது விஜய்க்கு
வந்து சேர்ந்திருக்கிறார். என்ன நடக்கும் என்று சொல்லத்தான் வேண்டுமா?’’ என்று கிண்டல்
செய்கிறார்கள்.