News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாளை (அக்.8) 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரட்ஜ் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு  பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.7) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணிவரையில் அந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.


அந்த வகையில் 14 ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதேபோல் மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.


சென்னை எழும்பூர், விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணிவரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஒட்டுமொத்தமாக 44 மின்சார ரெயில்களின் சேவை நாளை (அக்.8) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே காலை 11 மணிக்கு, 45 நிமிடம் மற்றும் 20 நிமிட இடைவெளிகளில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் மறு மாரக்கத்தில் 40 நிமிட இடைªவிளயில் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link