காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139  பேர் இஸ்ரேலியன் கொல்லப்பட்டனர் .

இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து  251 பேரை பணய கைதிகளாக காசா  முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர் .  அதையடுத்து  ஹமாஸ் ஆய்தக்குழு மீது போர் அறிவித்த  இஸ்ரேல் 117   பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஹமாஸ்  ஆயுதக்குழுவினர்களால்  கடத்தப்பட்டு கொல்லப்பட்ட  பணய  கைதிகளின்  உடல்களும்  மீட்கப்பட்டுள்ளன. ஆனால் ,  101  இஸ்ரேலியர்கள்  ஹமாஸ்  வசம்  பணய  கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்தது .இதில்  பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது .

இதை தொடர்ந்து காசா முனை கான் யூனிஸ் நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர் இது காசா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link