Share via:
காஸாவில் மனிதநேய உதவி வழங்கலாம் என்று எகிப்து நாட்டுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட தில் 500 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல்&ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தற்போது 13வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இருதரப்பிலும் உயிரிழந்து வருவது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, காஸா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ரூ.832 கோடி நிதியுதவி வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காஸாவில் அவதிப்பட்டு வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை எகிப்து வழங்கலாம் என்று இஸ்ரேல் நாடு அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் அனுமதி அளித்துள்ள நிலையில் காஸாவுக்கு தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

