Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/12/8b9d8dc0-c551-4f79-a0c4-89cacb12d3c0-1024x765.webp)
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடூரத்துக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை திசை திருப்புவதற்கு உடன்பிறப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அபத்தமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது.
பெண்ணுக்கு சம உரிமை வாங்கிக்கொடுத்தோம், பெண்களின் படிப்புக்கு உரிமைத் தொகை கொடுக்கிறோம் என்றெல்லாம் மார் தட்டிக்கொள்ளும் ஸ்டாலினின் ஆதரவாளர்களே, பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்தும் வேலையையும் செய்து வழக்கை திசை திருப்புகிறார்கள்.
குற்றம் வெளியான நாளில் எஃப்.ஐ.ஆர். வெளியே கசிந்ததே சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. எந்தப் பெண்ணும் இது போன்று புகார் கொடுக்க பொதுவெளியில் வரக்கூடாது என்பதை எச்சரிக்கும் வகையிலே எஃப்.ஐ.ஆர். கசிந்தது என்று எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகிறார்கள்.
படிக்கும் மாணவிக்கு புதருக்குள் என்ன வேலை, அந்தப் பெண் தவறு செய்ததால்தானே வீடியோ எடுத்தான். ஒழுக்கமான பொண்ணுக்கு இப்படி தப்பு நடக்குமா என்று பழியைத் தூக்கி மாணவி மீதே போடுகிறார்கள் தி.மு.க.வினர்.
ஒரு பெண் மேஜரான பிறகு அவர் என்ன செய்ய வேண்டாம், என்ன செய்யக்கூடாது என்று சொல்வதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை. படிக்கும் வயதில் காதலிப்பது அவரது விருப்பம். இதை வைத்து பெண்ணையும் அவரது குடும்பத்தையும் அவமானப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பெண்ணை அவமானப்படுத்தும் ஒவ்வொரு நபரும் பாலியல் குற்றவாளி தான்.
யார் அந்த சார் என்ற கேள்விக்கு இது வரை விடை கிடைக்காத நிலையில், ‘நாங்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று மாணவிகளை காட்சிப்படுத்துவதும் திசை திருப்பும் செயல். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிங்க ஸ்டாலின். யார் அந்த சார் என்பதை சொல்லுங்கள். எல்லை மீறும் கட்சியினரின் கால், கைகளை உடையுங்கள் ஸ்டாலின். அது தான் உங்கள் ஆளுமையைக் காட்டும்