Share via:
விஜய் பாணியில் இன்று நடிகர் விஷாலும் கட்சி அறிவிப்பை வெளியிடப்
போகிறார் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், இன்று ஒரு கடிதம்
மட்டும் போட்டுவிட்டு கப்சிப் ஆகியிருக்கிறார் நடிகர் விஷால்.
அந்த கடிதத்தில், ‘எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக
சேவகனாக, உங்களில் ஒருவனாக அங்கீகாரம் கொடுத்த தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் நற்பணி இயக்கமாக செயல்படுத்தி
வருகிறோம்.
என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலமும், முன்னாள்
ஜனாதிபதி ஐயா அப்துல்கலாம் பெயரிலும் வருடந்தோறும் எண்ணற்ற ஏழை, எளிய மாணவிகளை படிக்க
வைத்து உதவி வருகிறோம்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயம் எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது
இல்லை. ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவன் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை
செய்துகொண்டே இருப்பேன்.
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்துவரும் பணிகளை
தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால்
அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் எப்படியிருக்கிறது
என்பதை பார்த்துவிட்டு முடிவெடுப்பதற்காக விஷால் காத்திருக்கிறார் என்றும், விஜய் மாஸ்
ரசிகர்களுக்கு முன்பு தன்னுடைய அரசியல் எடுபடாது என்று பயந்துவிட்டார் என்றும் சமூகவலைதளங்களில்
விமர்சனம் கொடிகட்டிப் பறக்கிறது.