Share via:
விஜய் கட்சியில் அனுபவமிக்க அரசியல்வாதிகள் யாருமே இல்லை என்ற
குறையைத் தீர்ப்பதற்காக செங்கோட்டையனைக் கொண்டுவந்தார்கள். அடுத்து நாஞ்சில் சம்பத்
வந்தார். இப்போது ஓபிஎஸ் கூடாரத்திலிருந்து ஜேசிடி பிரபாகரை கட்சியில் இணைத்துள்ளனர்.
ஜேசிடி பிரபாகரை வில்லிவாக்கம் எம்ஜிஆர் என்று சொல்வதுண்டு. வில்லிவாக்கம்
மக்களின் அடிப்படை தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர், அவர் விஜய் தலைமையிலான
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது கட்சிக்கு நல்லது, சென்னைக்கு ஒரு வேட்பாளர்
ரெடி என்கிறார்கள்.
அதேநேரம், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் கிடைக்காமல்
இருப்பது விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் குறித்துப்
பேசியிருக்கும் விஜய் டீம், ‘’ஜனநாயகன் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்து பல நாட்களாகிவிட்டநிலையில்,
இன்னமும் அப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. காரணம் சொல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு
வருகிறது.
படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் இல்லை, வசனங்களுக்கு ம்யூட்
இல்லை. தவிர தணிக்கைக்குழு சொன்ன அறிவுறுத்தலின்படி சில மாற்றங்களும் செய்யப்பட்டுவிட்டன.
ஆனாலும் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் வழங்கவில்லை என்றால் என்ன
அர்த்தம்?
சான்றிதழ் கேட்டு தொடர்புகொள்ளும் போதெல்லாம் கனத்த மௌனமே பதிலாக
கிடைக்கிறது. தன் அரசியல் எதிரி என்று ஒன்றிய பாஜக அரசை அடையாளம்காட்டினார் விஜய்.
அதற்கு பழிதீர்க்க தணிக்கைக்குழுவை பாஜக அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது. தணிக்கை
சான்றிதழை தாமதப்படுத்துவதன் மூலம் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று வெளியாவதை
தடுக்க நினைக்கிறதா பாஜக அரசு?’’ என்று கொந்தளிக்கிறார்கள்.
அதேநேரம், ஜனநாயகன் படத்தில் அரசியல் இல்லை என்று சொன்னாலும் பாடலில்
அரசியல் இருக்கிறது. ராவணனை போற்றும் வகையில் இருந்தது. அதோடு, ’எதிரியை அனுப்புனா
சிரிக்கிறான் பழகிட்டான் போல’ என்று பாடல் எழுதியிருக்கிறார்கள்.