Share via:
விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் பிரேமலதா அன்புக்கட்டளை
போட்டிருக்கிறார். அதாவது, அவரவர் ஏரியாவில் விஜயகாந்திற்கு சிலை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதனை நானே திறந்து வைப்பேன். சிலை வைக்காத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று நெருக்கடி
கொடுக்கிறாராம்.
இதையடுத்து அவரது நிர்வாகிகள் அவர்களால் முடிந்த வரை செலவு செய்து
விஜயகாந்திற்கு அவர்களுடைய சொந்த இடத்தில் குட்டிக் குட்டி சிலைகளை உருவாக்கிவருகிறார்கள்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் பிரேமலதா திறந்த விஜயகாந்த் உருவச் சிலை கடுமையான விமர்சனத்துக்கு
ஆளாகியுள்ளது.
ஏனென்றால், அந்த சிலைக்கும் விஜயகாந்திற்கும் எந்த சம்பந்தமும்
இல்லை. விஜயகாந்த் கோபத்தில் எப்படி இருப்பாரே, அதேபோல் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று
சொல்லி சிலை திறக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை என்னவோ குட்டிச்சாத்தான் போன்று காட்சியளித்தது.
ஆகவே, சிலை திறக்கப்பட்டதும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.
பிரேமலதா போன பிறகு சிலையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததுடன்
நில்லாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். விஜயகாந்த் பெயரைக் காப்பாத்துறதாச் சொல்லி
கெடுத்துடாதீங்கப்பா.