Share via:
ஆளும் தி.மு.க.வை எதிர்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்று சொல்லப்படும் நிலையில், அவரது கொடி அறிமுகத்துக்கு தி.மு.க.வினரே கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார்கள். இந்த நிலையில், விஜய் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறதாம்.
ஏனென்றால், விஜய் வரவால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆகையால் நமது எனர்ஜியை பாசிட்டிவாக செலவழிப்போம். தி.மு.க. ஆட்சியின் நன்மையை மட்டும் மக்களுக்குக் கொண்டுசெல்வோம். அவருடைய முதல் பாதிப்பு சீமானின் நாம் தமிழர் கட்சிக்குத் தான் என்கிறார்கள்.
விஜய் வாங்க போகும் ஓட்டு சீமானுக்கு கிடைக்க இருந்த ஓட்டுகள் அல்லது இத்தனை நாள் திமுக எதிர்ப்பு ஓட்டுகளாக இருந்தவையாகத் தான் இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறதாம். அதனாலே களத்தில் விஜய்யை எதிர்க்க முடியாமல் சீமான் தந்திரமாக தன்னுடன் கூட்டனிக்குள் கொண்டு வர படாதபாடுபட்டு பார்த்தார். அது நடக்கவில்லை, சீமானுடன் கூட்டனி என்பதை விஜய் நிராகரித்து விட்டார் என்பது சீமானுக்கு சோகமான செய்தி,
விஜய் கட்சி கொடி அறிவிப்பு அதை தொடர்ந்து மாநாடு என்பதை எல்லாம் உற்று நோக்கும் சீமான் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் இருக்கும் செல்வாக்கை இழந்து நிற்கவே வாய்ப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து நடுக்கத்தில் இருக்கிறாராம்.
எனவே, இது வரை கூட்டணி பற்றி யோசிக்காத சீமான் அடுத்தகட்ட அரசியல் குறித்து தீவிர ஆலோசனை நடத்திவருகிறாராம்.