Share via:
ஜோசப் என்ற விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து இந்துக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் முயற்சி என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இது பொய்யான குற்றசாட்டு என்று விஜய் பக்கத்திலிருந்து ஒரு மறுப்பு கூட வரவில்லை என்பது தான் அவரது ரசிகர்களையே குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.
பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ், ‘’விஜய் குடும்பம் Jesuit அமைப்பை தமிழகத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது உண்மை, விஜய் மாமாக்கள் 1992களில் லயோலா கல்லூரி நிர்வாகத்தில் பணத்தை கையாடல் செய்தது மட்டும் அல்ல அதன் சொத்துக்களையும் விற்பனை செய்து அதன் வழி வந்த பணத்தை வைத்து தான் விஜய் தந்தை விஜய் வைத்து படம் எடுக்கவும் அவர் மாமா சேவியர் பிரிட்டோ வியாபாரம் தொடங்கவும் ஆரம்பித்தனர். அப்போ ஆரம்பித்து மாஸ்டர் படம் வரை கணக்கவழக்கு இல்லாத அளவுக்கு கருப்பு பணம் வெள்ளையாக்கும் வேலையை ஒரு பினாமியாக பார்த்தவர்கள் இவர்கள்.
இதில் முக்கியமானவர்கள் A1 – விஜய் முதல் மாமா சேவியர் அல்போன்ஸ் (1992 களில் லயோலா கல்லூரி பிரின்சிபலாக இருந்தவர்) , A2 – விஜய் இரண்டாவது மாமா சேவியர் பிரிட்டோ (விஜய் முதல் 3 படங்கள் எடுத்தவரும் , மாஸ்டர் படத்தை எடுத்தவரும், விஜய் 3 பினாமிகளில் முக்கியமானவர்), A3 – விஜய் தந்தை SA சந்திரசேகர் – மூளையாக செயல்பட்டவர் :
இந்த மூவரும் சேர்ந்து கத்தோலிக்க சபையில் அதிகாரமிக்க அமைப்பான ஏசு சபையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று அரசியல் உள்ளே நுழைக்கிறார்கள். A4 – விஜய் தான், 18 வயது நடிக்க வந்த காலத்தில் இவர் மாமாக்கள் அப்பா செய்த தவறுகள் புரியாமல் இருக்கலாம் ஆனால் கடந்த பிகில் திரைப்படம் ஆரம்பித்து இப்போது வரை கருப்பு பணத்தையும் ஏசு சபை கட்டுப்பாட்டையும் செய்த அனைத்தும் இவர் ஆசியோடு தான் நடந்தது.
இன்று இல்லை நாளை அல்ல நாளை மறு நாள் இந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வு உருவாகும் , விஜய் பின்னால் நிற்கும் மதவெறி கூட்டத்தை எப்படி விஜய் நரிதனத்தோடு நகர்த்துகிறார் என்று. இது அரசியல் தாண்டி ஒரு மதவெறி பிடித்த குடும்பத்தின் அயோக்கிதனத்தை வெட்டவெளிச்சமாக்கும் முயற்சியாக வீடியோ வெளியிடப்படும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.