Share via:
உதயநிதியின் கார் ரேஸ்க்கு 10 ஆயிரம் பேர் ஒன்று கூடுவார்கள் என்று
எதிர்பார்த்து பத்து நாட்கள் முன்னெச்சரிக்கை எடுத்த தி.மு.க. அரசு விமான சாகச நிகழ்ச்சிக்கு
பொறுப்பு ஏற்காமல் தப்பிக்கப் பார்க்கிறது என்று பேசிய முன்னாள் அமைச்சர் அடுத்தபடியாக,
உதயநிதி டீசர்ட் போட்டு வருகிறார், அதை கழட்டவில்லை என்றால் வழக்குத் தொடர்வோம் என்று
கூறியது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
விமான சாகச நிகழ்ச்சி குறித்து தி.மு.க.வை வறுத்தெடுத்த ஜெயக்குமார்
அடுத்தபடியாக, ‘’அரசு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சட்டை, வேட்டி, பேண்ட் அணிவது மரபு.
ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னத்தைப் பதிவு
செய்த டீ சர்ட் போட்டு வருக்றார். அரசு நிகழ்ச்சியில் கட்சிக் கொடியுடன் செல்வது ஏற்புடையதல்ல.
உதயநிதிக்கு சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கித் தருகிறோம்’’ என்று பேசியதற்கு தி.மு.க.வினர்
கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’டீ சர்ட் போடுவது மரபு இல்லை என்றால்
உங்கள் முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொப்பி அணிந்துவந்தது என்ன மரபு. அமைச்சர்கள்
கட்சிக் கரை வேட்டி போடுவது என்ன மரபு. நீங்கள் எல்லோருக்கும் பொதுவான சபாநாயகராக இருந்தபோதே,
கரை வேட்டிதானே இருந்தது. வேட்டி வாங்குவதற்கு உங்களுக்குப் பணம் இல்லையா..? நீங்கள்
ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்றால் மெயின் ரோட்டுக்கு வரச்சொன்ன சிந்துக்கு வாங்கிக்கொடுங்க’’
என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில்
அ.தி.மு.க.வுக்கு அரசியல் செய்யத் தெரியவில்லையே