Share via:
அமெரிக்க டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இதற்குப் பின்னணியில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்
பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக
அபராதத் தொகை வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க
அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும்
பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில்,
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என
இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், ’இந்தியா, அமெரிக்காவுக்கு
நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு
அதிக வரி வசூலிக்கிறது. ஆணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும்,
உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில்
கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுகிறது. எனவே, ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு
இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்’
என்று டிரம்ப் அறிவித்துள்ளர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘’இந்திய பொருட்கள்
மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்தும்
அதன் தாக்கம் குறித்தும் கவனத்துடன் ஆராய்ந்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் டிரம்ப் குறித்து எதுவும் பேசாமல் மோடி ஓடியதற்கே
இந்த கதி என்றால், பேசியிருந்தால்..?