Share via:
சமீபத்தில் த்ரிஷாவின் புகைப்படத்தை விஜய் செல்ஃபியாக எடுத்து வெளியிட்டிருப்பது சமூகவலைதளங்களில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. தொடர்ந்து விஜய் படங்களில் த்ரிஷா நடிப்பதும், எங்கே போனாலும் ஒன்றாக சுற்றுவதும் இவர்களுக்குள் என்ன உறவு என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான விஜய் – த்ரிஷா புகைப்படங்களை விஜய் தான் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு த்ரிஷா மீது விஜய் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்.
மனைவி இந்தியாவில் இல்லை என்பதால் த்ரிஷாவுடன் தலைவர் ஜாலியாக சுற்றுவதையும் புகைப்படங்கள் அப்லோடு செய்வதையும் அவரது ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்.
அதேநேரம், த்ரிஷாவுடன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார் என்றால் அதை வெளிப்படையாக சொல்வதற்குத் தைரியம் இல்லாதவர் விஜய் என்று அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள். கமல்ஹாசன் இந்த விஷயத்தில் ரொம்பவே தெளிவானவர். யாருடனாவது ரிலேசன்ஷிப்பில் இருந்தால் அவர்களுடன் தைரியமாக வெளியே வருவார். இப்படி யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டு ஊர் சுற்றுவது தான் உங்க தலைவரின் கெத்தா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய் கட்சி ஆரம்பித்து வெளியே வரும் நேரத்தில் கண்டிப்பாக த்ரிஷாவும் வருவார். அவருக்கு தலைவருக்கு சமமான பதவி தரப்படும் என்றும் சொல்கிறார்கள்.
எப்படியோ தமிழர்களுக்கு அழகான அரசியல்வாதி கிடைத்தால் சரி.