News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

யாருக்கும் தெரியாமல் தனியே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது விவசாயி சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று சொல்லப்பட்டது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது போன்று இப்போது சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைத்துவிட்டது.

இது குறித்து சீமான், ‘’மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது’’ என்று பெருமையுடன் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த சின்னத்துக்காகவா மத்திய அமைச்சரை சந்தித்தார் என்று தம்பிகள் இப்போது தலையைத் தொங்கப்போட்டு நிற்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இரண்டு பேரும் சண்டை போட்டு நடத்திவரும் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த மாநாடு குறித்து சீமான், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் திருவள்ளுவராண்டு 2056 மேழம் (சித்திரை) 28ஆம் நாள் நடைபெறுகிற, 21ஆவது சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தாய் நிலத்தில் தமிழ்ப்பகைமை தலைத்தூக்காத வண்ணம் நல்லிணக்கத்தோடு தமிழ்ச் சமூகங்கள் தலை நிமிரவும், தமிழர் இன ஒற்றுமை தழைத்தோங்கவும் அயராது உழைக்கும் சமூகநீதிப்போராளி மருத்துவர் ஐயா ச.ராமதாஸ் அவர்களுக்கும், மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி உறவுகளுக்கும் எனனுடைய அன்பு வணக்கமும்! வாழ்த்துகளும்’’ என்று கூறியிருக்கிறார்.

இது என்ன அரசியலோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link