Share via:

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம்
செய்ய மாட்டோம் என்றதும் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப்
மீண்டும் ஒரு முறை பாஜகவை பார்த்து பங்கமாக கலாய்த்திருக்கிறார். இந்த நேரத்தில் ஆபரேஷன்
சிந்தூர் வெற்றியை கொண்டாட ஊர் ஊரால் ஊர்வலம் செல்வதற்கு பா.ஜ.க. தயாராவது பக்கா தேர்தல்
நாடகம் என்றே பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ’’இந்தியா மீது
ஏவப்படும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் என பிரகடனம்
செய்திருக்கிறார். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அதன் நடவடிக்கைகளுக்கும்
கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், “பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ. (ராணுவ
நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்), இந்திய டி.ஜி.எம்.ஓ.விடம் கேட்டுக் கொண்டதற்கு
இணங்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுடன் இனி பேச்சு நடத்தினால், பயங்கரவாதம், பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பது
இந்தியாவின் உறுதியை, வலிமையை காட்டுகிறது. பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு இந்தியாவின்
வலிமையை உலகுக்கு பறைசாற்றியுள்ளது என்று பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் தேசியக் கொடியுடன் வெற்றி
ஊர்வலம் நடத்த இருப்பதாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா
என்ற கேள்வி எழுந்துள்ளது.