News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மகாராஷ்டிரா தேர்தலில் ராகுல் காந்தியின் இண்டியா கூட்டணிக்கு எதிராக நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய திருமாவளவன், எல்லா தொகுதிகளிலும் நோட்டாவை விட மோசமான வாக்குகள் வாங்கியிருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்த திருமாவளவனே, தலித் ஓட்டுகளை பிரிச்சு காங்கிரஸை தோக்கடிச்சுட்டாங்க என்று இரட்டை வேடம் போட்டிருப்பது குரூர நகைச்சுவையாகியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் போக்கர்டான் தொகுதியில் 97 வாக்குகள், அவுரங்காபாத் கிழக்கில் 57 வாக்குகள், புலம்பிரி தொகுதியில் 216 வாக்குகள் மற்றும் பிம்பிரி தொகுதியில் 351 வாக்குகள் மட்டுமே திருமாவளவன் கட்சி வாக்குகள் வாங்கியுள்ளன். இந்த தொகுதிகளில் நோட்டா வாக்குகள் இதை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய தோல்வியைப் பற்றி பேசாமல் தலித் ஓட்டுகளை பிரித்துவிட்டார்கள் என்று அறிக்கை கொடுத்துள்ளார். அதில், ‘’மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின.

பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் “பாஜகவுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்” என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. இது அறிந்தோ அறியாமலோ பாஜக வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது.

“ இந்த வெற்றி மோடி -அமித்ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது.இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது.

இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது…’’என்று கூறியிருக்கிறார். ஒருங்கிணைக்கும் வேலையை இவர் செய்திருக்கலாமே என்று காங்கிரஸ் கட்சியினர் இவர் மீது பாய்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link