Share via:
பெரியாரை அப்பா அப்பான்னு கூப்பிட்ட அந்த பெண்தான் பிற்காலத்தில்
அவர் மணந்த மணியம்மை. அப்பா என்று கூப்பிட்ட ஒரு பெண்ணை மணந்தவருக்கு மற்ற உறவுகளை
மாற்று எண்ணத்தில் கண்டிப்பாக பார்த்திருப்பார் எண்ணியிருப்பார் என்றே யூகிக்க முடிகிறது.
எனவே, காம இச்சையை பெற்றவளிடம் தீர்த்துக்கொள் என்று நிச்சயம் பெரியார் சொல்லியிருப்பார்
என்று நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமானுக்கும்
அவரது மனைவி கயல்விழிக்கும் உள்ள உறவுகளை எடுத்துப் போட்டு தி.மு.க.வினர் அவமானப்படுத்தி
வருகிறார்கள். அதாவது, ‘’சீமான் வயசு – 58 கயல்விழி வயசு – 31 கயல்விழி அம்மா வயசு
– 52 சீமானுக்கும் கயல்விழிக்கும் வயசு வித்தியாசம் 27 வருஷம். மகள் வயசுல இருக்க ஒரு
பொண்ண கல்யாணம் பண்ணியதற்குக் காரணம் மாமியாருடன் இருந்த உறவு’’ என்று புதிய குற்றச்சாட்டு
வைக்கிறார்கள்.
அதோடு, சீமானுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளுக்கும் எந்த வித்தியாசமும்
கிடையாது என்று பட்டியல் போடுகிறார்கள். அதாவது சங்கிகளுக்கு பெரியார் பிடிக்காது, திராவிடம் பிடிக்காது. தமிழ்த்தாய்
வாழ்த்தில் திராவிடம் எனும் வார்த்தை பிடிக்காது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக
பொங்கும் நேரத்தில் பாமகவின் வாரிசு அரசியல் பற்றி பேச மாட்டார்கள். ஈரோட்டில் இடைத்தேர்தல்
வருவதால்.. பெரியார் எதிர்ப்பு வாக்குகளை பெற முன்பைவிட கடுமையாக பெரியாரை திட்டி தீர்க்கிறார்’’
என்று புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.ர்
அதேநேரம், கவர்னரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு, யுஜிசி
கொள்கை மாற்றம் போன்ற மத்திய அரசின் அடாவடியை திசை திருப்பவே சீமான் இப்போது வேண்டுமென்றே
பெரியாரை திரும்பத் திரும்ப வம்புக்கு இழுப்பதாகக் கூறுகிறார்கள்.
இது குறித்து திருமாவளவன், ‘’அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தந்தை
பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக,
பெரியாரின் சாதிஒழிப்புக் கருத்தியலில், சமூகநீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங்கப்
பரிவாரங்கள் இத்தகைய பரப்புரைகளைச் செய்து வருகின்றன. அதற்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டு
அரசியலில் அவர்களால் காலூன்ற இயலாத இறுக்க நிலையே ஆகும். இம்மண்ணில் அவர்கள் வேரூன்றுவதற்குப்
பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் தான் என்பதால், பெரியார் மீதான
நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதனால்
அவர்மீது ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
இத்தகைய சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும்
ஈடுபட்டுவருகின்றனர். சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும்
அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனாதன சக்திகள் பேசும் பிற்போக்கு அரசியலுக்குத் துணைநிற்கும் வகையில், இவர்கள் சமூகநீதி
கோட்பாட்டு அரசியலின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாருக்கு எதிரான தாக்குதல்களில்
தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்தகையோரை அடையாளம் கண்டு
அவர்களின் சனாதன ஃபாசிச அரசியல் சதிகளை முறியடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.