Share via:
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு
விடாததும், அளவுக்கு அதிகம் பா.ஜ.க.வுக்கு நெருக்கம் காட்டியதும் தி.மு.க. கூட்டணிகளுக்கு
இடையில் கடும் அதிருப்தியாகியிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி படத்துடன் இன்று
முதல்வர் சுமார் 100 கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் திறந்து வைப்பதும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
’பதவி சுகம் அனுபவிக்க நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வது திமுகவின்
வாடிக்கை. நாணயம் வெளியீட்டு விழா என்பது தமிழக ஆசு நடத்திய விழா. இதில் எங்குமே மத்திய
அரசின் பெயர் இல்லை. சோனியா, ராகுல் அல்லது கார்கேவை விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும்’
என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘மத்திய அரசு அழைப்பு விடுத்த காரணத்தாலே
ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை’ என்று வெளிப்படையாகப் பொய் சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் மாநில அரச் சார்பாக தலைமைச் செயலாளர் பத்திரிகை அடித்து அண்ணாமலை முதற்கொண்டு
பல்வேறு தலைவர்களுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.
ஆனால், ராஜ்நாத் சிங் மற்றும் அண்ணாமலைக்கு எந்த வகையிலும் இடையூறு
தரக்கூடாது என்பதற்காகவே ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில்
பா.ஜ.க.வுடன் உறவு பாராட்டுவது ஏன் என்று ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஸ்டாலின், ‘தி.மு.க. கொள்கையின் அடிப்படையிலே ஆதரவு கொடுக்கிறது,
எதிர்ப்பு தெரிவிக்கிறது’ என்று கூறியிருக்கிறாரே தவிர, எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன்
கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவுபடக் கூறவில்லை. ஆகவே, இந்த விவகாரம் கூட்டணிக்குள்
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை அமைதியாக எதிர்ப்பு தெரிவித்துவரும்
நிலையில், ‘பா.ஜ.க.விற்கு எதிராக உள்ள கூட்டணியில்தான் நாங்கள் அங்கம் வகிப்போம்’ என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தில்லாக பேட்டி
கொடுத்திருக்கிறார்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் மறைமுக உறவில் இருக்கிறார்கள் என அதிமுக
விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணிக் கட்சியின் முதல் கொந்தளிப்பு பரபரப்பாகியுள்ளது.
கூட்டணி குறித்து ஸ்டாலின் இப்போதே தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்டமன்றத்தில் இந்த
கூட்டணி தொடர்வது சிக்கல் தான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எப்படியும்
இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என்ற நம்பிக்கையில் குஷியாகி இருக்கிறது
எடப்பாடி தரப்பு.