Share via:
மத்திய அரசு கொண்டுவதந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து
லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில்
போராடி வருகின்றனர் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை
மோசமாக உள்ளது.
விபத்து ஏற்படும்போது கடுமையான இழப்பீடு 10 ஆண்டு சிறைத் தண்டனை
போன்றவை அமலாக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
லாரிகள் இயக்கப்படாத காரணத்தால் பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள்
கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மட்டுமின்றி மராட்டியம்
உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.
சரக்கு போக்குவரத்து முடங்கியதால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஓட்டுநர்கள் ஊர் திரும்ப
முடியாமல் தவித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் நடக்கும் போராட்டம் போலவே தமிழகத்திலும் லாரிகள்
போராட்டத்தில் ஈடுபடுமா என்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழகத்திலும்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம்
செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதேநேரம், தொடர்ந்து
போராட்டம் நீடிக்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த நிலையில், மீண்டும்
விவசாயிகள் போராட்டமும் வெடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வட மாநிலங்களில்
கடுமையான சோதனைகளை பா.ஜ.க. எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.