Share via:
மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்படும் என்று தி.மு.க.
அறிவித்த போதும், பரந்தூர் விமான நிலையத்துக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் எதிராக பேட்டி கொடுத்தார்.
சீமான் பேசுகையில், ‘’400 கோடி ரூபாயில் கிளாம்பாக்கத்தில் பேருந்து
நிலையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அதற்காக போராட்டம் நடத்தினோமா? மீனம்பாக்கம்
விமான நிலையத்திற்கு நிறைய விமானங்கள் வருகிறது. அதனால் 5000 ஏக்கர் கையகப்படுத்தி
விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம்
நடத்தினோமா? தமிழகத்தில் ஏற்கனவே உள்ள துறைமுகங்கள் எல்லாம் நிரம்பியுள்ளது. இதனால்
புதிய துறைமுக 6111 ஏக்கரில் வேண்டும் என்று போராட்டம் நடத்தினோமா? வேண்டாம் என்பதையெல்லம்
திணிக்கிறாய், வேண்டும் என்பதை செய்ய மறுக்கிறாய்? என்ன அரசு இது?
திருவண்ணாமலையில் எதற்கு சிப்காட்? அதன் முதலாளி யார்? எங்களுக்கு
சிப்காட்டில் வேலை வேண்டாம். எங்கள் நிலத்தை கொடு, நாங்கள் தற்சார்பு வாழ்க்கை வாழ்கிறோம்.
வளர்ச்சி என்று சொல்லும் போது கேட்பதற்கு தேனாக உள்ளது. வாயில் தேன் ஊத்தினால் சப்பி
சாப்பிடலாம். காதில் ஊத்தினால் என்ன செய்ய முடியும்? திமுக அரசுக்கு தொலைநோக்கு பார்வை
உள்ளதா? சென்னை மாநகரில் ஒரு பேருந்து நிலையமாவது இருக்கிறதா? இருந்த ஒரு பேருந்து
நிலையத்தையும் மூடிட்டிங்க. எதுக்கு 110 கோடி ரூபாய் செலவு செய்து அதை கட்டினீங்க?
லுலு மாலுக்குதான் அந்த இடத்தை கொடுக்கப் போறீங்க.. அதுக்குதானே
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடினிங்க? 40 கிமீ தொலைவில் பேருந்து நிலையத்தை வைத்தால்
மக்கள் எப்படி அவ்ளோ தூரம் செல்ல முடியும்? அங்கிருந்து எவ்வளவு தூரம் பயணித்து வர
முடியும்? அங்குள்ள மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்படுவார்கள்? அந்த பேருந்து நிலையத்தில் உதயசூரியன்
சின்னம் எதற்கு? தம்பி உதய நிதி கேட்கிறார் உங்க அப்பன் வீட்டு காசா என்று, நான் அவரை
கேட்கிறேன் உங்க அப்பன் வீட்டு காசா? யார் தாத்தா வீட்டு காசு?’’ என்று கொதித்திருந்தார்.
இதற்கு வழக்கம்போல் தி.மு.க. உடன்பிறப்புகள் கடுமையான கண்டனம்
தெரிவித்து வருகிறார்கள். கிளாம்பாக்கத்திற்குச் சென்று பஸ் ஏறும் சீமானின் தம்பிகள்
அங்கு டாஸ்மாக் கடை இல்லாதது அறிந்து கோபம் அடைந்திருக்கிறார்கள். அந்த கோபத்தையே சீமான்
காட்டுகிறார் என்று கிண்டல் செய்துவருகிறார்கள்.
கச்சேரி ஆரம்பமாகட்டும்.