Share via:

அண்ணா பல்கலை மாணவி
விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் ஞானசேகர் வீட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாப்பிடுவது
போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, ‘யார் அந்த சார்?’ என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
திமுக மூத்த அமைச்சர்கள்
ரகுபதி, கோவி செழியன்,அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் பாலியல்
குற்றவாளி திமுக கட்சியை சார்ந்தவர் அல்ல என்று சத்தியம் செய்யாத குறையாக ஊடகங்களில்
தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இன்று திமுக மூத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றவாளி
ஞானசேகரன் வீட்டில் உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதோடு, மா.சுப்பிரமணியன்
வெளியே செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஞானசேகரும் சென்றிருப்பது தெரியவருகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டப்
பெண் சார் ஒருவரிடம் செல்ல வேண்டும் என குற்றவாளி ஞானசேகரன் சொன்னதாக செய்திகள் வெளிவந்த
போது இப்படி திமுக தரப்பில் உண்மையை மறைக்க திமுக மூத்த அமைச்சர்கள்,காவல்துறை என மாறி
மாறி பல பொய்கள் சொல்லி இப்பொழுது நீதிமன்றம் வரை பிரச்சனை பூதகாரமாகி உள்ள இந்த சமயத்தில்
இந்த புகைப்படம் வெளிவந்துள்ளது திமுக கட்சியின் நம்பிக்கை தன்மையை பெரும் கேள்விக்குறி
ஆக்குகிறது.
நீதிமன்றம் நேற்று
காவல்துறையை எப்படி விசாரணை முடிக்கும் முன்பே ஒரு குற்றவாளி தான் இதில் ஈடுபட்டுள்ளார்
என முடிவுக்கு வந்தீர்கள்,காவல்துறை கமிஷனர் யார் அனுமதியுடன் பேட்டி கொடுத்தார், எஃப்.ஐ.ஆர்
எப்படி லீக்கானது என பல்வேறு கேள்விகளை அதிமுக வழக்கறிஞர் டீம், வரலட்சுமி தொடுத்த
வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து நேற்று மதியம் விசாரித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஆகவே, திமுக நியாயமான
கட்சி என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதே இன்றைய சூழ்நிலையில் நல்லது. என்ன
செய்யப்போகிறார் ஸ்டாலின்?