Share via:
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற நேரத்தில் பொன்முடியிடம்
இருந்த பவர்ஃபுல் பதவியான உயர் கல்வித் துறை புடுங்கப்பட்டு, டம்மியாக வனத்துறை வழங்கப்பட்டது.
துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகிய சீனியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல்
தன்னுடைய பதவியை மட்டும் பறித்த ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் பொன்முடி.
இதையடுத்தே விழுப்புரத்தில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான ஆலோசனைக்
கூட்டத்தில் பேசிய பொன்முடி, ‘’தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார்,
உதயா முடிவு செய்வார். எனவே, எனக்கே கூட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். யார் நின்னாலும்
நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்’’ என்று கடுப்பாகப் பேசியது சோஷியல் மீடியாக்களில்
வைரலானது.
அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு முதன்முறையாக இப்படி பொன்முடி
பேசியிருப்பது கட்சியில் அவருக்கு இருக்கும் கசப்பையே காட்டுகிறது. இனி, உதயநிதி மட்டுமே
வேட்பாளர்களை முடிவு செய்வார் என்பதால் தனக்கும் தன்னுடைய மகன் கெளதம சிகாமணிக்கும்
வாய்ப்பு கிடைக்காது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார். மற்ற நிர்வாகிகளும் பொன்முடி
மீது அதிருப்தியில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என்றே கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர்
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இப்போது
உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாகவும் சிக்கல் ஏற்படலாம்
என்ற அச்சத்தில் இருக்கிறார்.
ஆகவே, இவரை பா.ஜ.க. பிரமுகர்கள் அணுகியிருக்கிறார்கள். இப்போது
பா.ஜ.க.வுக்கு வந்துவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பொன்முடி மற்றும் அவரது மகன்
கெளதம சிகாமணி ஆகியோர் தேர்தலில் நிற்கலாம். அதோடு பாஜக வாஷிங் மெஷின் மூலம் ஊழல் செய்யாத
குற்றவாளியாக வெளிவரலாம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க. உறுதி அளித்த காரணத்தாலே தைரியமாக இப்படி பேசுகிறார்.
எந்த நேரத்திலும் ஆளும் கட்சியின் அமைச்சர் பல்டி அடித்து கட்சி மாறும் காட்சியைப்
பார்க்கலாம் என்கிறர்கள்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்.