Share via:
கருணாநிதியை கடைசி காலத்தில் ஸ்டாலின் கைதி போன்று வைத்திருந்தார்
என்று ஆ.ராசா ஆடியோவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதற்கு,
கடைசி காலம் வரை தலைவர் சிங்கம் போன்று வாழ்ந்தார், அந்த சிங்கத்தின் பிள்ளை நான் என்று
கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
மேலும் அவர், ‘’தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும்
பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின்
பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற
பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள்.
உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை
ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு
மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின்
Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து திமுகவினர் ஜெயலலிதாவின் இறுதி நாட்கள் எப்படியிருந்தது
என்பதை வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில், யாரும் பார்க்க முடியாதபடி
அடைத்து வைக்கப் பட்டிருந்தார். மாநில கவர்னர் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை.
ஜெயலலிதாவின் மூச்சு அடங்கிய பின்னும், அவரது மரணம் 48 மணி நேரம் கழித்தே நாட்டு மக்களுக்கு
அறிவிக்கப்பட்டது! ஜெயா உயிரோடு இருக்கும் போதே வந்து இறங்கிய வெங்கையா நாயுடு, திரை
மறைவில் நடத்திய பேரங்கள் மக்களுக்குத் தெரியாது.
ஒரு அனாதைப் பிணம் போல்,
சொந்த உறவுகள் கூட அருகில் வராதபடி பார்த்துக் கொண்டார் சசிகலா! ஆனால் ஸ்டாலின் தனது
தந்தையாருக்கு செய்தது போல், எத்தனை புதல்வர்கள் செய்து இருப்பார்கள்? கலைஞரின் இறுதி
மூச்சு வரை அவரை கண்ணின் மணியென பார்த்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
வந்து பார்த்தார்! தேசியத் தலைவர்கள் பலர் வந்து பார்த்தார்கள். எல்லோரும் பார்க்க
அனுமதிக்கப்பட்டனர்’’ என்று கொதிக்கிறார்கள்.
இதற்கு அதிமுகவினர், ‘’ஆ.ராசா பேசியதைத்தானே எடப்பாடி பேசினார். எனவே, ஸ்டாலின் கண்டிக்க வேண்டியது ஆ.ராசாவைத்தான்,
எடப்பாடியை அல்ல’’ என்கிறார்கள். இதுவும் சரிதான்.
