Share via:
தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது
என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மற்ற விஷயங்களில் எப்படியோ மது விற்பனையில்
நம்பர் ஒன் என்பது ஸ்டாலினுக்கு சாதனைதான்.
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன.
தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட
வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும்
மது விற்பனை நடைபெறும்.
இந்தாண்டு 14, 15 தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.435 கோடிக்கு
மது விற்பனை நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி ரூ.184 கோடிக்கும், பொங்கல் நாளில்
மட்டும் ரூ.251 கோடிக்கு விற்றது. தமிழகம் முழுவதும் மொத்தமாக கடந்த 14,15 ஆகிய
நாட்களில் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இந்த வசூலுக்கு அன்புமணி, ‘’மக்கள் நலனுக்காக துரும்பைக்கூட
அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும் மேலும் குடிகாரர்களாக்கி
மது வணிகத்தை பெருக்குவதில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை
அல்ல. வேதனை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை
நோக்கி பயணிக்கவில்லை. மக்கள் விரோத அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் மறக்க
முடியாத பாடத்தை புகட்டுவார்கள்…’’ என்று பொங்கியிருக்கிறார்.
