Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-11T124647.278.jpg)
முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதற்கு அமைச்சர்கள் மெனக்கெடுவதைப்
போலவே அதிகாரிகளும் அளவுக்கு மீறி ஜால்ரா போடுகிறார்கள். மீபத்தில் நடைபெற்ற குரூப்
2 ஏ தேர்வில் ஸ்டாலின் புகழ் பாடும் வகையில் எதனால் அவர் தாயுமானவர் என்று கேள்வி எழுப்பியது
படு சர்ச்சையாக மாறியிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வில் தமிழ்நாட்டில் முதல்வரை தாயுமானவர்
என்று அழைக்கக் காரணமான திட்டம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தேர்வுகள் என்பது
தேர்வு எழுதுபவர்களின் அடிப்படைத் திறன்களைக் கண்டறியவா அல்லது திராவிட மாடலை விளம்பரப்படுத்தவா
என்பது மிகப்பெரும் சந்தேகம். இது போன்ற கேள்விகளால் முதல்வரை திருப்திப்படுத்த வேண்டுமென்று
தேர்வு ஆணையம் நினைக்கிறதா? அல்லது இது போன்ற கேள்விகளை அரசே கட்டாயமாக்கி இருக்கிறதா?
இனி வரும் தேர்வுகளில் முதல்வர் அல்வா சாப்பிட்ட கடையின் பெயர் என்ன என்பது கேள்வியாக்கப்பட்டாலும்
ஆச்சர்யம் இல்லை. இது போன்ற கேலிக் கூத்து விளம்பரங்களால் நிர்வாக சீர்கேடுகள் மறைந்து
விடுவதில்லை என்பதை அறிவால் உணர்ந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளைக் கைவிட்டு
தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த அரசு முயலுமா? என்று பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.
இது குறித்து டிடிவி தினகரன், ‘’அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும்
லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சரின்
கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும்
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சரின்
புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது அரசுப்பணிகளில் இருந்து
கொண்டு திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேநேரம் அ.தி.மு.க.வினர் புதிய கேள்வி ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது, தமிழ்நாட்டில் அரங்கேறிவரும் எந்த சம்பவங்களால் தமிழக முதல்வரை கையாலாகதவர்
என்று மக்கள் அழைக்கின்றனர்? 1) தொடர் கள்ளச்சாராய மரணங்களால்.. 2) சாதிவாரி கணக்கெடுக்காமல்
ஏமாற்றுவதால்.. 3) கொலைகள், கொள்ளைகள், பாலியில் வன்கொடுமைகள் என தினம் தினம் சட்ட
ஒழுங்கு சந்தி சிரிப்பதால்.. 4) திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதிகளை குப்பையில் போட்டதால்..
5) மின்சார & பத்திரப்பதிவு கட்டணங்கள், வரிகள், விலைவாசிகள் தொடர் உயர்வால்..
6)விவசாய, கல்வி, நகை கடன்களை ரத்துசெய்வேன் என்ற வாக்குறுதிகளை சொல்லி ஏழைகளை ஏமாற்றியதால்..
7) 5லட்சம் அரசு காலிபணியிடங்களை நிரப்பாமல் நாடகமாடுவாதால்.. 8) மீண்டும் பழைய ஓய்வூதிய
திட்டம் என வடைசுட்டு அரசு ஊழியர்களுக்கு விபூதியடித்ததால்.. 9) அனைத்து மகளீருக்கும்
1000 எனக்கூறி தகுதி எனக்கூறி பல மகளீர்களை ஏமாற்றியது.. 10) தமிழகத்தை கடனில் தத்தளக்கவிட்டுள்ளதால்..
11) தெருவுக்கு ஒரு சாராயக்கடை லட்சியம், பாட்டிலுக்கு ரூபாய் 10 நிச்சயம் என சாராய
மாடலாட்சி நடத்துவதால்.. 12) தற்காலிக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,
செவிலியர்கள், மருத்துவர்கள் என ஏனைய பலரின் வயிற்றில் அடித்ததால்.. 13) நீட், கச்சத்தீவு,
காவிரி, மீனவர்கள், சமூகநீதி போன்ற விடயங்களில் மாநில உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்ததால்..
14) வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் வெட்டியாக வெளிநாட்டு டூர் என்று பட்டியல் போடுகிறார்கள்.