Share via:
தாய்நாட்டுக்கு உயிர்
கொடுத்த ஒரு ராணுவ வீரனின் கதை என்று பா.ஜ.க.வினர், ‘அமரன்’ திரைப்படத்துக்கு தொடர்ந்து
பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் மீது அமரன் படம் வெறுப்பைக்
கக்குகிறது என்று பல்வேறு அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை தியேட்டருக்கு அழைத்துச்சென்று அமரன் படம் பார்க்க வைத்திருப்பது
கடும் சர்ச்சையாகி வருகிறது.
இந்த படம் சிறுவர்கள்
பார்ப்பதற்குத் தகுதியானது என்று சென்சார் கூறவில்லை. ஏனென்றால் படத்தில் நிறைய வன்முறை
உள்ளது. மேலும், இஸ்லாமியர் மீதான எதிர்ப்பை ஆழமாக விதைக்கும் நோக்கில் இந்த படம் இருக்கிறது
என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்
சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை அமரன் திரைப்படத்திற்கு அழைத்து போய் பார்க்க
வைத்திருக்கின்றார்கள். இந்த பள்ளி நிர்வாகத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் நெருக்கமான தொடர்பு
உள்ளதாம். என்ன் காரணமாக இருந்தாலும் பள்ளி மாணவர்கள இது போன்ற சினிமாக்களுக்கு கூட்டிச்செல்வது
எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோன்று அம்பேத்கர்
படத்துக்கு மாணவர்கள் அழைத்துச்செல்லும் நிலை வருமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பள்ளிக் கல்வித்துறை இந்த விஷயத்தில் சீரீயஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும்
மோசமான விளைவுகள் ஏற்படலாம்.