Share via:
சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்
ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக குறிப்பாக உதயநிதிக்கு எதிராக மீண்டும் பல்வேறு விமர்சனங்களை
முன்வைக்கத் தொடங்கினார். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவரும் சவுக்கு சங்கர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.
பெண் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக
தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு கஞ்சா வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவில், குண்டர் தடுப்புச்சட்டத்தின்
கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய
சிறையில் இருந்து கடந்த மாதம் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
வெளியே வந்த பிறகு சவுக்கு சங்கர், “கோவை சிறையில் எனது கையை உடைத்தனர்.
எனக்கு 3 இடங்களில் எலும்பு உடைந்தது. கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.” என்றும்
குற்றம் சாட்டி அதிர்வலைகளை உருவாக்கினார். இந்த நிலையில் திடீரென நேற்று மதியம் ஏற்பட்ட
நெஞ்சுவலிக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இது வரை அவரது உடல்நிலை
குறித்து ரிப்போர்ட் எதுவும் வராத நிலையில், உயிருக்கு ஆபத்து என்று அவரது ஆதரவாளர்கள்
தவித்துவருகிறார்கள்.
அதேநேரம் சவுக்கு ஆதரவாளர், ‘’சவுக்கு சங்கரை மருத்துவமனையில்
சந்தித்துப் பேசினேன். மிகவும் நன்றாக உற்சாகமாக இருக்கிறார். எனவே, கவலைப்பட எதுவும்
இல்லை, பொய்யான வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்.
தி.மு.க. அபிமானிகளோ, ‘’சமீபத்தில் திருச்சி சூர்யா சவுக்கு சங்கர்
மற்ரும் ஃபெலிக்ஸ் இருவரும் சேர்ந்து 400 பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.
சங்க்ரின் அலுவலகத்தில் வேலை செய்த
சின்ன பெண்ணிடமும் தவறாக நடந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலீஸ் வாக்குமூலம்
வாங்கியிருக்கிறார்கள். ஆகவே, கைதுக்குப் பயந்தே நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்குப்
போய் பதுங்கியிருக்கிறார்’’ என்று கூறுகிறார்கள்.
விரைவில் சவுக்கு சங்கர் நலம் பெற்று வரட்டும்.