Share via:
சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் சவுக்கு சங்கர் தி.மு.க.
அரசுக்கு பெரும் குடைச்சலக் கொடுப்பார், நிறைய ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு பரபரப்புக்
கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னை மீண்டும் வழக்கில் சிக்கவைத்து
சிறைக்குப் போகிறார்கள் என்று அவரே பதிவு போட்டிருக்கிறார்.
சவுக்கு சங்கரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் ஏராளமான தகவல்கள்
திரட்டப்பட்டுள்ளன என்றும் 400க்கும் மேற்பட்ட பெண்களுடன் சவுக்கு சங்கருக்குத் தொடர்பு
இருக்கிறது என்று திருச்சி சிவா ஒரு பேட்டியில் கூறினார். இந்த விஷயத்தில் தேவையில்லாமல்
சவுக்கு சங்கர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்க வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள்
கொதித்து எழுந்தார்கள்.
இதையடுத்து, ‘நான் பொய் சொல்லவில்லை. இதோ ஆதாரம்’ என்று ஒரு பெண்ணுடன்
சவுக்கு சங்கர் இருக்கும் புகைப்படத்தையும் சாட் ஆதாரமும் கொடுத்தார். உடனே, ‘தனீப்பட்ட
வாழ்க்கை குறித்த புகைப்படம் பகிரக்கூடாது’ என்று சொன்னார்களே தவிர, அந்த பதிவு பொய்
என்று யாரும் சொல்லவில்லை. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு
பதியப்பட இருப்பதாக ஒரு தகவல் சமூகவலைதளத்தில் பதிவாகியிருக்கிறது.
சவுக்கு சங்கருக்குப் பணம் கொடுத்தவர்கள் மற்றும் அவரது சொத்து
விவகாரங்கள் இருந்தாலும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள்
வெளியாகின்றன. இதையடுத்தே என்னை கைது செய்வதற்கு காவல் துறை அதிகாரி முயற்சி செய்துவருகிறார்.
என்கவுண்டர் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நிதிமன்றம் தலையிட்டு இருப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்றே
நம்புவோம்.