News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸை கொண்டுவந்துவிட்டு, திருமாவளவனை வெளியே அனுப்ப வேண்டும் என்ற திமுக அசைன்மென்ட்டை செல்வப்பெருந்தகை மேற்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று செல்வப்பெருந்தகை தனியே பேசிவிட்டு வந்தார். இதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார்.

செல்வப்பெருந்தகையின் இந்த கருத்து திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான டி.ரவிக்குமார், “காங்கிரஸ் கட்சித் தலைமையின் அனுமதியோடுதான் செல்வப்பெருந்தகை இந்த கருத்தை தெரிவித்தாரா என்பது பற்றி அக்கட்சியின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற நிலைபாட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலரும் விசிகவில் அங்கம் வகிக்கிறார்கள். விசிகவில் 10 சதவீத்த்துக்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்களும், 2 எம்எல்ஏக்களும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் ராமதாசையும், அன்புமணியையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை. பாஜகவுக்கு எதிராக ராமதாஸ் ஏதாவது பேசியிருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்….

செல்வப்பெருந்தகையின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2014-ம் ஆண்டுமுதல் பிரதமர் மோடியை ஆதரித்துவரும் பாமகவை காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் எப்படி சேர்க்க முடியும்.  இத்தனை காலம் ராகுல் காந்தியை ஆதரித்து நம்மோடு இருக்கும் கூட்டணி கட்சிகளை ஏன் காயப்படுத்த வேண்டும்? இது கட்சியின் கருத்தல்ல… தனிப்பட்ட நபரின் கருத்து” என்று கொதித்திருக்கிறார்.

தன்னுடைய ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி மற்றும்  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபாலை டேக் செய்துள்ள விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், “மாநில அளவிலும், தேசிய அளவிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் ந்நிலையாஅக இருந்துள்ளது. இந்த ச்சூழலில் பாமகவை இந்த கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்ற செல்வப்பெருந்தகையின் கருத்து வருத்தம் அளிக்கிறது. பாஜக கூட்டணியை தங்களால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை திமுக தலைமையில் இல்லாதது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினரோ இந்த விஷயத்தில் எந்த கருத்தும் கூறாமல் அமைதி காக்கிறார்கள். ஆக, திமுக கூட்டணியில் மோதல் தொடங்கிடுச்சு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link