Share via:
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலை புலிகள் அமைப்புகளிடம்
இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றது என்.ஐ.ஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம்
உறுதியாகியுள்ளதை அடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர்
எல்.முருகன் கூறியிருக்கிறார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படுகிறதா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள்அமைப்புகளுடன்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு
கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள்,
துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்ஐஏ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம்
அளித்தனர்.
அதன் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள்
மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணபரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில்
நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான
சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாதக தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி
ரஞ்சித்குமார்(33), நாதக மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), மாவட்ட தகவல்
தொழில்நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர்
பொறியாளர் பாலாஜி(33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது
அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில்,
கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப்,
பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஒரு லேப்டாப்,
7 செல்போன்கள், 8 சிம் மெமரி கார்டுகள், 4 பென் டிரைவ்கள், விடுதலை புலிகளின் மற்றும்
அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள், ‘சாட்டை துரைமுருகன், ஆயுதப்புரட்சிக்கு
தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து பெறுவது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் மற்றும் தமிழகத்தில் ஆயுதபுரட்சிக்கு
ஆட்கள் மற்றும் நிதி திரட்டிய சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக
சோதனையில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், மேலும் நாதக முக்கிய நிர்வாகிகள் சிலரை
கைது செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது’ என்கிறார்கள்.
இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர்
எல்.முருகன், ‘தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர்
கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சோதனை காட்டி
கொடுத்துள்ளது. தீவிரவாதம், பயங்கரவாதம், தேச ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. தேசத்திற்கு எதிரான செயல்களில்
நாம் தமிழர் கட்சி ஈடுபட்டுள்ளதை என்ஐஏ உறுதி செய்துள்ளது’ என்று கூறியிருப்பதை அடுத்து
சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை உறுதி என்று சொல்லப்படுகிறது.
கைது நடவடிக்கை தொடரும்பட்சத்தில் கட்சிக்குத் தடை வரவும் வாய்ப்பு
இருப்பதாக சொல்லப்படுகிறது.