Share via:
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு நடந்துமுடிந்து சில நாட்கள்
ஆன பிறகும், அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் சீமானின் மனைவி கயல்விழி அமர்ந்திருந்த
விவகாரம் படு சர்ச்சையாக மாறிவருகிறது.
ஏனென்றால் வாரிசு விவகாரத்தை முன்வைத்தே சீமான் தி.மு.க. மீது
ஏகப்பட்ட விமர்சனங்கள் வைத்திருக்கிறார். இதில் தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சியில்
இருக்கும் வாரிசுகளுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார். உதயநிதியை இன்னமும்
திட்டிக்கொண்டு இருக்கிறார்.
மற்ற கட்சிகளுக்கு எதிராக விமர்சனம் செய்தவர் இப்படி முன்வரிசையில்
மனைவியை உட்கார வைக்கலாமா என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே சீமான் தனது மைத்துனருக்கு நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கியது கடுமையான
விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால், சீமான் அதனை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில் கயல்விழி அண்ணியார் முன்வரிசையில் உட்கார வைத்திருப்பதை
நாம் தமிழர்கள் சமாளிக்கும் வகையில், ‘கயல்விழி நாம் தமிழர் அணியின் வழக்கறிஞர் பிரிவில்
இருக்கிறார். அவர் படிப்படியாக கட்சிக்குள் உயர்ந்துகொண்டு வருகிறார். அவருக்கு முக்கியத்துவம்
கொடுத்ததில் தவறே இல்லை என்று சமாளித்து வருகிறார்கள்.
அதுசரி, விஜயகாந்த் கட்சிக்கு பிரேமலதா என்றால் சீமான் கட்சிக்கு
கயல்விழி என்று தலைவருக்கு உதவியாக தலைவி வருவதில் தப்பு இல்லைன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…