News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கு தேர்தலில் 50% இடம் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் சீமானே இப்படி பெண்களை கொச்சைப்படுத்திப் பேசலாமா என்று கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் தோன்றியிருப்பதால், நிறைய பெண் நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் பேசிய சீமான், ‘’விஜயலட்சுமி என் மேல பாலியல் குற்றம் சுமத்திய பின் தான் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவனுக்குள்ளும் ரொமான்ஸ் இருந்திருக்கு பாரேன் என்று பல பெண்கள் இப்பொழுது எனது fans ஆகிவிட்டார்கள்’’ என்று பேசுகிறார். அதைக் கேட்டு அங்கிருக்கும் பெண்களும் தம்பிகளும் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்.

அதேபோல், ’’காளியம்மாள பிசுறு ன்னு சொல்லுவேன் மசுறு ன்னும் சொல்லுவேன்…. உனக்கென்ன மசுறு பிரச்சன’’ என்று கேள்வி எழுப்பியதும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

வீட்டுக்குள் அல்லது தனியறையில் யாரை எப்படி திட்டுவதும் பிரச்னை இல்லை. போனில் அப்படி பேசியது கூட தனிப்பட்ட விஷயம். ஆனால், அதை பொதுமேடையில் வைத்து, ‘அப்படித்தான் பேசுவேன்’ என்பது மாபெரும் சர்வாதிகாரத்தனம். பெண்ணுக்கு அவமானம் என்கிறார்கள்.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுகி, ‘’என்ன பேசுகிறீர்கள் சீமான்? உங்கள் கட்சி பெண்கள் என்றால் இழிவு செய்யலாமா? தலைமை பண்பு இவ்வளவு தானா? அவள் இவள் என மரியாதை குறைவான பேச்சு வேறு…நாதகவில் உள்ள பெண்கள் இதை எதிர்க்க வேண்டாமா? வெட்கக்கேடு நாதக தம்பிகளா! இந்த இழிவையும் ஆதரிக்க போகிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

’’இது சீமானின் அரசியல் அதிகார ஆசைக்கான வெளிப்பாடு. வன்மம் மிக்க பேச்சால் மக்களை நம்பவைத்து ஆட்சி அதிகாரத்தை அடையலாம் என்ற அவரின் உளறல் இது. மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்ற பெரியாரின் மண் இவ்வாறான சொற்களை கடந்து செல்வது கூட ஒருவகையில் சகிப்புத்தன்மையின் உச்சம் தான்… சீமானின் அநாகரிகமான பேச்சுகளும், நடைமுறையில் சாத்தியமில்லாத முழக்கங்களும் தம்பிமார் என்றழைக்கப்படும் அதே இளைஞர்கள் கட்சியை விட்டு வெளியேற இவரே பாதை அமைத்துக் கொடுக்கிறார்’’ என்று விமர்சனம் எழும் நிலையில் பல்வேறு நகரங்களில் பதவி வகித்த பெண் நிர்வாகிகள் வெளிப்படையாக அறிவித்தும் அறிவிக்காமலும் பதவி விலகி வருகிறார்கள்.

காளியம்மாளும் கடுமையான மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த எதிர்ப்புகளையும் வெளியேறுபவர்களையும் பிசிறு என்று சீமான் கருதுவார் என்றால் அவருக்குத் தான் சேதாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link