Share via:
சாதிவாரிக்
கணக்கெடுப்பும், சமூக நீதியும் என்ற
தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பேசி வருகிறார் நாம் தமிழர் சீமான். நெல்லையில்
நடந்த கூட்டத்தில் சீமானை எதிர்த்து கேள்வி கேட்ட நிர்வாகிகளை சாதியைச் சொல்லித் திட்டியதாக
புகார் எழுந்துள்ளது. அதோடு, அந்தக் கூட்டத்தில் தாசில்தார் கலந்துகொண்டதும் பெரும்
சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
திருநெல்வேலியில்
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி
பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டர். அப்போது, இந்த பகுதியில்
நாடார்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் சாதி ரீதியாக வன்மம் பேசும் சாட்டை துரைமுருகனை
கண்டிக்க வேண்டும் என்றும் அந்த கலந்தாய்வு கூட்டத்தில்
பங்கேற்ற பர்வீன் – மாவட்ட இளைஞரணி தலைவர்,
அந்தோணி
– நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி செயலாளர், அரசகுமார்
– ராதாபுரம் ஒன்றிய தலைவர், சார்லஸ்
– அம்பை சட்டமன்ற தொகுதி செயலாளர்,
சந்திரமோகன் – ராதாபுரம் தொகுதி துணைத்
தலைவர் ஆகியோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படிதாண்டா, நீ,
வா, போ எனவும்,
ஜாதியை குறிப்பிட்டு ஒருமையிலும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த நிர்வாகிகள்
கலந்தாய்வுக் கூட்டத்திலிருந்து
வெளியேறிவிட்டனர். அடுத்து அவர்கள், ‘’சீமான் கட்சியில் சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார்.
அவருடன் இணைந்து பயணிக்க முடியாது’’ என்று செய்தியாளர்களிடம் பேசினார்கள். இவர்கள்
அனைவரும் கூண்டோடு விஜய் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீமானிடம்
கேள்வி எழுப்பியபோது, ‘’இது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. இதனால் மக்களுக்கு
எந்தப் பாதிப்பும் இல்லை. ஆகவே, இதையெல்லாம் கேட்க வேண்டாம்’’ என்று நழுவினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு
அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம்
தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக
பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
என்று உடன்பிறப்புகள் குரல் எழுப்பிவருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
திசையன்விளை தாசில்தாராகவும், அதன் பிறகு நான்குனேரி
நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர்.
தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராகவும் பணியாற்றி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவர் மாற்று பெயரில்
அதாவது செல்வன் குமரன் என்கிற
பெயரில் செயல் பட்டு வருகிறார்.
கடந்த நான்கு நாட்களாக சீமானோடு
இருக்கும் தாசில்தான் நெல்லையில் நடந்த கலந்தாய்விலும் கலந்துகொண்டுள்ளார்.
தாசில்தார் செல்வக்குமாரின் மனைவியான ப.சத்யா
இரண்டு முறை வேட்பாளராக
அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாசில்தார்
செல்வகுமார் மீது நடவடிகை எடுக்கப்படுமா அல்லது ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீதிபதிகள்
பங்கேற்பது தவறில்லை என்று மத்திய அரசு அறிவிப்பு செய்தது போன்று ஸ்டாலின் அரசும் கண்டுகொள்ளாமல்
நகருமா..?