News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வரும் மே 11ம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பா.ம.க.வினர் உற்சாகமாகத் தயாராகிவந்த நிலையில், கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரையிலும் நானே கட்சித் தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டுமே அதிரடி காட்டி பா.ம.க.வினரை கதற விட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையை அடுத்து பா.ம.க. பொருளாளர் திலகபாமா உடனடியாக அன்புமணிக்கு ஆதரவாக அறிக்கை விட்டார். ராமதாஸை சந்திக்க வந்த திலகபாமா விரட்டியடிக்கப்பட்டார். இதையடுத்தி வழக்கறிஞர் பாலு, பசுமைத்தாயகம் அருள், தருமபுரி வெங்கடேசன் உள்ளிட்டோர் டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் ராமதாஸ், ‘’நான் உயிருடன் இருக்கும் காலம் வரை நான் தான் தலைவர், இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று திருப்பியனுப்பியிருக்கிறார்.

கட்சியை பாஜகவிடம் அன்புமணி அடகு வைத்துவிட்டதாக டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார். திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பது மட்டுமே எதிர்காலத்துக்குப் பயன் தரும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேபோல் மருமகள் செளமியா அன்புமணியை தேர்தலில் நிறுத்தியதும் டாக்டர் ராமதாஸ் விருப்பத்தைத் தாண்டியே செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளரான காடுவெட்டி மனோஜ் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கூறியிருக்கிறார். அதாவது பதவி வெறியில் இருக்கும் அன்புமணி அதற்காக பெற்ற தந்தையே கொலை செய்யவும் தயங்க மாட்டார். தன்னுடைய இஷ்டத்துக்கு கூட்டணி அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உயிருடன் இருக்க முடியாது எனும் வகையில் அன்புமணி பேசியதே முக்கியக் காரனம் என்கிறார்.

குடுமிபிடிச் சண்டையில் யார் ஜெயிக்கப்போவது என்று புரியாமல் பா.ம.க.வினர் தடுமாறுகிறார்கள். இந்த நிமிடம் வரை அன்புமணி இதுகுறித்து வாயைத் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link