News

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

Follow Us

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் இப்போது விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு விஜய் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியும் கடும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

இன்று நடிகர் விஜய் தைப்பூசத்தை முன்னிட்டு, ‘’தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!’’ என்று பதிவு போட்டிருக்கிறார். சீமானுக்குப் போட்டியாக விஜய் வேண்டுமென்றே முருகப்பெருமானை கையில் எடுத்திருக்கிறார் என்று நாம் தமிழர் தம்பிகள் கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

இது குறித்து நாம் தமிழர் தம்பிகள், ‘’தைப்பூசத்துக்கு வாழ்த்து சொன்ன விஜய் திருப்புரங்குன்றம் இந்து முஸ்லிம் இடையே பிரச்சனையில் யாருக்கும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மட்டும் வாழ்த்து சொல்வது ஏன்..? திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.கவினர் மதக் கலவரம் உருவாக்க முயன்ற நேரத்தில் அமைதி காத்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேநேரம் நேற்றைய தினம் நடிகர் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருடன் ஜான் ஆரோக்கியசாமி, பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போது, அதை விட்டுவிட்டு ஏன் விஜய்யை சந்திக்கிறார்? அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் விஜய்யை சரிக்கட்ட வந்தாரா என்றெல்லாம் அவரத் கட்சியினரே கேள்வி எழுப்புகிறார்கள். பிரசாந்த் கிஷோர் வேண்டாம் என்றும் விஜய் ஆதரவாளர்கள், ‘’இப்போது பிரசாந்த் கிஷோர் எதிலும் வெற்றி அடையவில்லை. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் தான் ஆலோசனை வழங்கினார். பீகார் தேர்தலில் நின்று கேவலமாக தோல்வி அடைந்தார். சொந்த மாநிலத்தைக் கணிக்க முடியாத ஒருவர் நம்மை ஜெயிக்க வைக்கப்போகிறாரா..? அவர் பக்காவான பா.ஜ.க. ஏஜெண்ட். அவரை பக்கத்தில் வைத்திருந்தாலே நம்மை சங்கி என்று முத்திரை குத்துவார்கள். அதனால், பிரசாந்த் கிஷோர் வேண்டவே வேண்டாம்’’ என்கிறார்கள்.

விஜய் என்ன சொல்லப்போகிறார்..?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link