News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அண்ணாமலைக்கு இன்னமும் பதவி வழங்கப்படவில்லை. மீண்டும் தலைவர் பதவிக்கு அவர் குறி வைத்திருக்கிறார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கல் ஏற்படும் வகையில் தேர்தலுக்குப் பிடிபட்ட பண விவகாரம் மாறிவகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது ஓட்டுக்குப் பணம் வாங்கிய வழக்கு இருக்கிறது. பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும், 2024 ஏப்ரலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.98 கோடி பணத்திற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், நயினார் நாகேந்திரன் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் 30 அன்று சூராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இவர் 1.5 கிலோ தங்கக் கட்டியை விற்று ரூ. 97.92 லட்சம் பணமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. சென்னையின் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபி-சிஐடி அளித்த தகவல்படி, பாஜகவின் தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்த்தனின் ஓட்டுநர் விக்னேஷ், இந்தப் பணப் பரிமாற்றத்தை எளிதாக்க சூராஜை அணுகியுள்ளார். அழைப்புப் பதிவு பகுப்பாய்வு (Call Record Analysis) கோவர்தன், பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் (அமைப்பு) கேசவ வினாயகம் ஆகியோரின் பண விநியோக முயற்சியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியதாக இந்த ஏஜென்சி குற்றம் சாட்டியுள்ளது.

நயினார் நாகேந்திரன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திருநெல்வேலியில் உள்ள வாக்காளர்களுக்கு இந்த பணம் வழங்கப்பட இருந்ததாகக் காவல்துறை சந்தேகித்துள்ளது. ஜூலை 10 அன்று நீதிமன்றம் சூராஜுக்கு ஜாமீன் வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 171(C), 171(E), 171(F) மற்றும் 188 ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்கள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கு 2024 ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. அப்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை மற்றும் தாம்பரம் காவல்துறை நெல்லை எக்ஸ்பிரஸில் மூன்று பேரிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளில் 3.98 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தது. சதீஷ், பெருமாள் மற்றும் நவீன் ஆகிய மூவரும் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர்களுக்கு இந்த பணம் விநியோகிக்கப்பட இருந்ததாகக் கூறினர். நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சென்னை  ஹோட்டல் ஒன்றின் மேலாளராக அடையாளம் காணப்பட்ட சதீஷிடம் பாஜக தலைவரின் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு முதலில் தாம்பரம் காவல்துறையினரால் கையாளப்பட்டாலும், ஏப்ரல் மாதம் சிபி-சிஐடி மெட்ரோ பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த ஏஜென்சி நாகேந்திரன் உட்பட பல பாஜக தலைவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாகேந்திரன் மறுத்தாலும், பணம் வந்த வழி மற்றும் மற்றும் சாட்சியங்கள், உயர்மட்ட மாநில பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியைக் காட்டுவதாக சிபி-சிஐடி புலனாய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆகவே, இந்த விவகாரம் சூடுபிடித்தால் நயினார் சிறைக்குப் போவார், மீண்டும் அண்ணாமலை வருவார் என்று பாஜகவில் ஒரு செய்தி பரவுகிறது. பாஜக ஆட்சியில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராசா என்று நயினார் தரப்பு தெம்பாகவே உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link