News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நயன்தாராவின் 75வது திரைப்படமான அண்ணபூரணி திரைப்படம் பரபரப்பாக வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

ஐயங்கார் வீட்டு பெண்ணான நயன்தாரா அசைவம் சமைக்க விரும்பும் சமைக்க கலைஞராக இருப்பார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். அவர் நயன்தாராவை அசைவம் சாப்பிட வைப்பதற்காக, ராமர் கூட அசைவம் சாப்பிட்டிருக்கிறார் என்று கூறுவார். 

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் சோலன்கி மும்பை எ.டி.மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ‘அன்னபூரணி படத்தில் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்வதாகவும், ஒரு முஸ்லீம் பையனை காதலிப்பதாகவும் காட்டியிருப்பதால் இந்துக்கள் மனம் புண் படுகிறது. ராமன் பற்றியும் வால்மீகி ராமாயணம் பற்றியும் அவதூறு செய்வதாக புகார் கூறியிருந்தார். இந்த படத்தில் நடித்த நயன்தாரா மீதும் ஜெய் மீதும் எப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருத்தனர். 

இந்த விஷயம் சர்ச்சையானதுமே படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டைன்மென்ட் ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட்டு, உடனடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து படத்தை எடுத்துவிடுவதாகவும், காட்சிகளை எல்லாம் கட் செய்த பிறகு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர். அதன்படி, இப்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து படம் நீக்கப்பட்டுள்ளது.

இப்போது நயன் தாராவையும் ஜெய்யையும் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ராமர் கோயில் கட்டும் நேரத்தில் இப்படி அவதூறு வேறு யாரும் கிளப்புவதற்கு அஞ்ச வேண்டும் என்பதற்காகவே இப்படி அழுத்தம் கொடுக்கிறார்களாம்.

என்ன செய்யப்போகிறார் நயன்தாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link