Share via:

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இதுவரை வெளிப்படையாக அரசியல்
நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுப்பது இல்லை. திரைக்குப் பின்னே நின்று எடப்பாடி பழனிசாமியின்
அரசியலை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமிக்குப்
பதிலாக அவர் கலந்துகொண்டிருப்பது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தனது இல்லத் திருமண விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை
நேரில் சந்தித்து பத்திகை கொடுத்தார் ஜி.கே.மணி. இதையொட்டியே அன்புமணிக்கு எம்.பி.
சீட் கேட்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா
இல்லையா என்பதைப் பொறுத்து பா.ம.க.வின் தேர்தல் வியூகம் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த திருமணத்தில் எடப்பாடி
பழனிசாமியின் மகன் மிதுன் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தேர்தல் கூட்டணியை
முடிவு செய்வதிலும், அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்னைகளையும் அவரே திரைமறைவில் ஈடுபடுகிறார்
என்பது கட்சியினர் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த திருமண விழா சந்திப்பின் மூலம்
இரண்டு விஷயம் தெரியவந்துள்ளது.
முதலாவது பா.ம.க.வுடன் கூட்டணிப் பேச்சுக்கு இன்னமும் வாய்ப்பு
இருக்கிறது. இரண்டாவது மிதுன் நேரடி அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது என்பது
தான். எப்படியோ அரசியல் சலசலக்கிறது.